உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.7 கோடி கொள்ளை வழக்கு சென்னையில் மேலும் இருவர் கைது

 ரூ.7 கோடி கொள்ளை வழக்கு சென்னையில் மேலும் இருவர் கைது

சித்தாபுரா: வங்கி பணம் 7.11 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், சென்னையில் பதுங்கியிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான 7.11 கோடி ரூபாய் பணம், ஏ.டி.எம்., வேனில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கோவிந்தபுரா போலீஸ் நிலைய ஏட்டு அன்னப்பா நாயக் உட்பட ஏழு பேரை, சித்தாபுரா போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6.29 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷிடம் 82 லட்சம் ரூபாய் இருப்பது பற்றி, கைதான ஏழு பேரும் கூறி இருந்தனர். தினேஷை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில், சென்னையில் உள்ள லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு தினேஷ், அவரது நண்பர் ஜினேஷ் ஆகியோரை சித்தாபுரா போலீசார் கைது செய்தனர். ஆனால் தினேஷிடம் பணம் எதுவும் இல்லை. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, தன்னிடம் யாரும் பணம் தரவில்லை என்று கூறி இருக்கிறார். அவரை பெங்களூரு அழைத்து வந்து போலீசார் விசாரிக்கின்றனர். வரும் நாட்களில் கைதான அனைவரையும் ஒன்றாக வைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை