உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாசன் கண் மருத்துவமனை சார்பில் சிறார்களுக்கு இலவச பரிசோதனை 

வாசன் கண் மருத்துவமனை சார்பில் சிறார்களுக்கு இலவச பரிசோதனை 

பெங்களூரு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வாசன் கண் மருத்துவமனை சார்பில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு வரும் 30ம் தேதி வரை, இலவச கண் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கர்நாடகாவில் 18 இடங்களில் செயல்பட்டு வரும், வாசன் கண் மருத்துவமனையில் அதிநவீன கண் பரிசோதனை, சிகிச்சை வசதிகள் கிடைக்கின்றன. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், இலவச கண் பரிசோதனை முகாம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்னையை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அதை சரிசெய்து குழந்தையின் கல்வி திறனை முழுமையாக மேம்படுத்துவது எங்கள் குறிக்கோள். இதனால் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 30 வரை, 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, எங்கள் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, இலவச கண் பரிசோதனை செய்து செல்லும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. ஆர்.டி.நகரில் உள்ள வாசன் மருத்துவமனையில் நேற்று நடந்த, இலவச கண் பரிசோதனையில் நாராயணா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு டாக்டர்கள் பாருல், ஹர்ஷிதா, தீக் ஷா ஆகியோர் கண் பரிசோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை