உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தர்மஸ்தலாவுக்கு வருகை தந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

 தர்மஸ்தலாவுக்கு வருகை தந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

மங்களூரு: நமது துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற தர்மஸ்தலாவின் மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார். துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற தர்மஸ்தலாவுக்கு, நேற்று காலை வருகை தந்த அவர், மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். அவருடன் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் வந்திருந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை கோவில் அறங்காவலர் வீரேந்திரஹெக்டே வரவேற்றார். அதன்பின், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், மஞ்சுநாதரை தரிசித்தார். சிறப்பு பூஜைகள் நடத்தி, காணிக்கை அர்ப்பணித்தார். சிறிது நேரம் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தார். தர்மஸ்தலாவின் புனிதம், சுற்றுச்சூழல் துாய்மை, ஒழுங்கு முறையுடன் நடக்கும் அன்னதானம், வசதியை வெகுவாக பாராட்டினார். கல்வி, சுகாதாரம், கிராம மேம்பாட்டுக்கு, கோவில் நிர்வாகம் செய்யும் சேவைகளை புகழ்ந்தார். துணை ஜனாதிபதி வரு கை காரணமாக, மஞ்சுநாத சுவாமி மற்றும் சுற்றுப்புறங்களில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ஜனாதிபதி கூறுகையில், ''மாநிலம் மற்றும் நாட்டின் நலனுக்காக, மக்களின் நன்மைக்காகவும் மஞ்சுநாத சுவாமியிடம் பிரார்த்தனை செய்தேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை