உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சஸ்பெண்டை எதிர்த்து விகாஸ் குமார் வழக்கு

சஸ்பெண்டை எதிர்த்து விகாஸ் குமார் வழக்கு

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஆக இருந்த தயானந்தா, கூடுதல் போலீஸ் கமிஷனர் விகாஸ் குமார், மத்திய மண்டல டி.சி.பி., சேகர், ஏ.சி.பி., பாலகிருஷ்ணா, கப்பன் பார்க் இன்ஸ்பெக்டர் கிரிஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது.தயானந்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மக்களிடம் இருந்தும், முன்னாள் போலீஸ் அதிகாரிகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இதற்கிடையில், அரசு தன்னை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், ஐ.பி.எஸ்., விகாஸ் குமார் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், அரசுக்கு எதிராக விகாஸ் குமார் வழக்கு தொடர்ந்து இருப்பது அரசுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை