உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வினய், ரஜத்துக்கு ஜாமின்

வினய், ரஜத்துக்கு ஜாமின்

பெங்களூரு : கையில் கத்தியுடன் ரீல்ஸ் செய்து, சிறையில் அடைக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலங்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் வினய் கவுடா, ரஜத் கிஷன். இவர்கள், அண்மையில் இன்ஸ்டாகிராமில் கையில் கத்தியுடன் ரோட்டில் நடந்து வருவது போல 'ரீல்ஸ்' வெளியிட்டனர்.இது தொடர்பாக பசவேஸ்வர நகர் போலீசார், இருவரையும் கைது செய்து, விசாரித்தனர். அப்போது, ரீல்சில் பயன்படுத்திய கத்திக்கு பதிலாக வேறொரு கத்தியை ஒப்படைத்தனர். இதை கண்டுபிடித்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.இருவரும் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, 24வது கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல், “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆதாரங்களை அழித்ததால் ஜாமின் வழங்கக்கூடாது,” என வாதாடினார்.நடிகர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், “இருவரும் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். மேலும், அவர்களுக்கு படப்பிடிப்புகள் உள்ளன,” என வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்ட பின், ரஜத், வினய் இருவருக்கும் ஜாமின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி