உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சூதாட்டத்திற்கு ஆதரவாக வீடியோ ரீல்ஸ் பிரபலங்களுக்கு எச்சரிக்கை

சூதாட்டத்திற்கு ஆதரவாக வீடியோ ரீல்ஸ் பிரபலங்களுக்கு எச்சரிக்கை

பெங்களூரு : இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளை வைத்து சூதாட்ட கும்பல் பணம் சம்பாதித்து வருகிறது. அதாவது ஒவ்வொரு பந்திலும் என்ன நடக்கும் என்று பணம் கட்டி சூதாடுகின்றனர்.இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ரீல்ஸ் பிரபலங்களான சோனு சீனிவாஸ் கவுடா, தக்சு திவு, வருண் கவுடா, தீபக் கவுடா உட்பட 40க்கும் மேற்பட்டோர், தங்களது சமூக வலைதள பக்கங்களில் சூதாட்டத்திற்கு ஆதரவாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டனர்.இதுபற்றி, பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் கவனத்திற்கு சென்றது. ரீல்ஸ் பிரபலங்களை நேற்று முன்தினம் சைபர் கிரைம் அலுவலகத்திற்கு வரவழைத்து, 'இனி சூதாட்டத்திற்கு ஆதரவாக வீடியோ வெளியிட கூடாது. அப்படி செய்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரித்தனர். அத்துடன், 'இதற்கு முன்பு பதிவேற்றிய வீடியோக்களையும் அழிக்க வேண்டும்' என கூறி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி