மேலும் செய்திகள்
நந்தினி இட்லி, தோசை மாவு மைசூரில் இன்று அறிமுகம்
15-May-2025
பெங்களூரு: கே.எம்.எப்., நந்தினி பிராண்ட் பெயரில் புதிதாக அறிமுகம் செய்த கேக், மபின் உள்ளிட்ட 18 வகையான இனிப்புகளுக்கு, மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.இதுகுறித்து, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள் கூறியதாவது:உலக பால் தினத்தையொட்டி, ஜூன் 1ம் தேதியன்று 18 விதமான நந்தினி கேக், மபின்களை மார்க்கெட்டில் கே.எம்.எப்., அறிமுகம் செய்தது. தனியார் பிராண்டுகளை விட, சிறந்த தரமான தின்பண்டங்கள், குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.மாநிலம் முழுவதும் கே.எம்.எப்., நந்தினி பால், தயிர், லஸ்சி, பிரட், பன், ஐஸ்கிரீம், இனிப்பு, காரம் உட்பட 150க்கும் மேற்பட்ட தயாரிப்பு பொருட்களை, மார்க்கெட்டில் விற்பனை செய்கிறது.தற்போது புதிதாக அறிமுகம் செய்த தயாரிப்பு பொருட்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அனைத்து மார்க்கெட்களிலும், நந்தினி கேக், மபின்கள் கிடைக்கின்றன. வரும் நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
15-May-2025