உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திப்பு சுல்தான் அரண்மனையில் தாதா பெயர் எழுதியது யார்?

திப்பு சுல்தான் அரண்மனையில் தாதா பெயர் எழுதியது யார்?

சிக்கபல்லாபூர்: திப்பு சுல்தான் அரண்மனையில் நிழல் உலக தாதாவின் பெயரை எழுதியது தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சிக்கபல்லாபூர் மாவட்டம், நந்திகிரி பகுதியில் திப்பு சுல்தானின் கோடை கால அரண்மனை உள்ளது. இது, இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரண்மனையில் சில தினங்களுக்கு முன்பு நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயி பெயரை சிலர் எழுதிவிட்டுச் சென்றனர். இது குறித்த படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரண்மனையில் தாதாவின் பெயரை எழுதிவிட்டுச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், எஸ்.பி., குஷால் சவுக்கி அறிவுறுத்தலின்படி நந்திகிரிதாம் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எஸ்.பி., குஷால் சவுக்கி கூறியதாவது: திப்பு அரண்மனையில் எழுதப்பட்ட பெயர் மீது வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதை தொல்லியல் துறை ஊழியர்களே செய்துவிட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ