உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நிவேதிதாவை விவாகரத்து செய்தது ஏன்?

நிவேதிதாவை விவாகரத்து செய்தது ஏன்?

பெங்களூரு: ''முன்னாள் மனைவி நிவேதிதா கவுடாவை விவாகரத்து செய்தது ஏன்,'' என்று, ராப் பாடகர் சந்தன் ஷெட்டி மனம் திறந்து உள்ளார்.கன்னட பிக்பாஸ் 5 வது சீசன் வெற்றியாளர் நிவேதிதா கவுடா, 27. கன்னட திரை உலகில் ராப் பாடகர் சந்தன் ஷெட்டி, 35. இவர்கள் இருவரும் கடந்த 2019 ல் காதல் திருமணம் செய்தனர். நட்சத்திர ஜோடியான இவர்கள், சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ மூலம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். ஆனால் கடந்த ஆண்டு திடீரென விவாகரத்து செய்தனர். இதனால், இருவரின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன காரணத்துக்காக விவாகரத்து செய்தனர் என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர்.

வாழ்க்கை முறை

இந்நிலையில் விவாகரத்து ஆனது குறித்து, முதல்முறையாக சந்தன் ஷெட்டி வெளிப்படையாக பேசி, மவுனம் கலைத்து உள்ளார்.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:நானும், நிவேதிதாவும் சூப்பரான ஜோடி என்று, சமூக வலைத்தளங்களில் நிறைய பேர் கருத்து தெரிவித்தனர். ஆனால் உண்மையில் நாங்கள் அப்படி இருக்கவில்லை. நான் நிவேதிதாவை குறை சொல்ல விரும்பவில்லை. அவர் இன்னும் இளமையாக உள்ளார். அவருக்கு வாழ்க்கையில் சாதிக்க நிறைய விஷயம் உள்ளது.ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உள்ளது. எனக்கு பிடிக்காத விஷயத்தில் நிவேதிதா தலையிடுவதை நான் விரும்பவில்லை. அவரும் அதை எண்ணத்தில் இருந்தார். சில விஷயங்களில் எங்களுக்கு ஒத்துபோகவில்லை. இதனால் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி நீண்ட நேரம் விவாதித்தோம். எனது வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. ஆனால் நிவேதிதா ஆடம்பரமான பெண்.

சுறுசுறுப்பு

நான் சாலையோர கடையில் கூட சாப்பிடுவேன். எங்கள் வாழ்க்கை முறையும் ஒத்துபோகவில்லை. திருமணம் ஆன நாளில் இருந்து விவாகரத்து பெறும் முதல் நாள் வரை, நிவேதிதாவை நான் முழுமையாக ஆதரித்தேன். அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்ன வேண்டும் என்றாலும் செய்தேன். ஆனால் எனது முயற்சி பலன் அளிக்காமல் போனது. இப்போது என்னிடம் எல்லாம் உள்ளது. ஆனால் முன்பு இருந்தது போன்று சுறுசுறுப்பு இல்லை. பழைய சந்தன் ஷெட்டியை மீண்டும் பார்க்க வேண்டும் என்று எனது ரசிகர்கள் விரும்புகின்றனர். இதற்காக முயற்சி செய்கிறேன்.நிவேதிதாவுடன் இருந்த நான்கு ஆண்டுகள் இனிமையானது. இப்போதும் கூட பழைய நினைவுகள் வருகிறது. மாதத்தில் இரண்டு நாட்கள் நமக்கு ஒரு துணை தேவை என்ற எண்ணம் வருகிறது. ஆனால் மற்ற நாட்களில் நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை