உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குடிக்க பணம் தர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து

குடிக்க பணம் தர மறுத்த மனைவிக்கு கத்திக்குத்து

பேடரஹள்ளி: குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவியை, கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடுகின்றனர். பெங்களூரு, பேடரஹள்ளியில் வசிப்பவர் பிரசன்னா, 35. இவரது மனைவி தேவிகா, 33. இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக இருந்த பிரசன்னா, இரண்டு ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டவில்லை. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்தார். அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை தாக்கினார். மனம் உடைந்த மனைவி, ஆறு மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்தார். பெற்றோர் வீட்டிற்கு சென்றார். தனியார் மருத்துவமனையில் வேலை செய்தார். மனைவி பிரிந்து சென்றதால் கோபம் அடைந்த பிரசன்னா, மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, முகநுால் பக்கத்தில் வெளியிட்டார். மனைவிக்கு அடிக்கடி போன் செய்து, பணம் கேட்டு தொல்லை கொடுத்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, மனைவி வேலை செய்யும் மருத்துவமனை அருகே, பிரசன்னா காத்திருந்தார். வேலை முடிந்து வெளியே வந்த மனைவியை வழிமறித்து, மது குடிக்க பணம் கேட்டு உள்ளார். பணம் கொடுக்க தேவிகா மறுத்தார். கோபம் அடைந்த பிரசன்னா, மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். அப்பகுதி மக்கள் தேவிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவிகாவின் பெற்றோர் அளித்த புகாரில், பிரசன்னா மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ