உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தேவகவுடா பேரனுக்கு பரோல் கிடைக்குமா?

 தேவகவுடா பேரனுக்கு பரோல் கிடைக்குமா?

பெங்களூரு: மறைந்த தன் பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்த, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 'பரோல்' மனு தாக்கல் செய்துள்ளார். வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி.,யும், தேவகவுடாவின் பேரனும், ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், அவர் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரின் பாட்டி சென்னம்மா, உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு, ஹாசன் நகரில் இன்று நடக்கிறது. இதற்கிடையில், பாட்டியின் இறுதி சடங்கில் பங்கேற்க தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளார். எனினும், எத்தனை நாட்கள் பரோல் தேவை என்பதை பிரஜ்வல் தன் மனுவில் குறிப்பிடவில்லை. இம்மனு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளரிடமும் அவசர பரோல் வழங்க மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவரும், இன்று இறுதி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பரோல் கிடைக்கும் பட்சத்தில், அவருக்கு சிறை தலைமை கண்காணிப்பாளர் உத்தரவின்படி, 24 மணி நேரம் முதல், 48 மணி நேரம் பரோல் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை