உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு குப்பை பிரச்னை சபைகளில் எதிரொலிக்குமா?

பெங்களூரு குப்பை பிரச்னை சபைகளில் எதிரொலிக்குமா?

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெரும்பாலும், மஹாதேவபுரா தொகுதியில் உள்ள மிட்டகனஹள்ளியிலே கொட்டப்பட்டு வந்தது.அங்கு குப்பைகள் கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி, அப்பகுதியினர் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனால், 500க்கும் மேற்பட்ட குப்பை லாரிகள், குப்பையை கொட்ட முடியாமல் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன. இதனால், நகரில் பல பகுதிகள் குப்பைகளாக காட்சி அளிக்கின்றன.இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இன்று சட்டசபை, மேல்சபை கூடுகிறது. இது குறித்து துணை முதல்வர் சிவகுமார், சபையில் விளக்கம் அளிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி, சபையை முடக்குவரா அல்லது சாதாரணமாக பேசி விட்டு விடுவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை