உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

 பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பு: போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

சிக்கபல்லாபூர்: மறுமணம் ஆசை காட்டி, விவாகரத்து ஆன பெண்களை, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வாலிபர், போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவில் வசித்தவர் கிரிஷ், 28. இவர் எளிதில் பணம் சம்பாதிக்கும் நோக்கில், பணக்கார, விவாகரத்து ஆன பெண்கள், தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்தார். முகநுால், இன்ஸ்டாகிராமில் வழியாக, பெண்களை அறிமுகம் செய்து கொள்வார். அவர்களிடம் கவர்ச்சிகரமாக பேசி, மறுமணம் ஆசையை ஏற்படுத்துவார். திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருப்பார். இதை தன் மொபைல் போனில், வீடியோவாக பதிவு செய்து, பெண்களிடம் காண்பித்து மிரட்டி பணம் கேட்பார். பணம் கொடுக்காவிட்டால், வீடியோவை சமூக வலை தளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவார். அவமானத்துக்கு பயந்து, பெண்கள் பணம் கொடுத்தனர். இவரிடம் ஏமாந்த சில பெண்கள், தைரியமாக முன் வந்து, சிந்தாமணி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, கிரிஷை தேடி வந்தனர். அவரது வீட்டை கண்டுபிடித்த மோலீசார், அவரை கைது செய்ய, நேற்று சென்றனர். ஆனால் பெண்கள் புகார் அளித்தது தெரிந்தவுடன், போலீஸ் பயத்தில் கிரிஷ், தன் வீட்டில் விஷம் குடித்த பின், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை