உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புலி தாக்கி தொழிலாளி பலி

புலி தாக்கி தொழிலாளி பலி

மைசூரு: நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயியை, புலி தாக்கி கொன்றது. இதனால் கிராமத்தினர் பீதியில் உள்ளனர். மைசூரு மாவட்டம், சரகூர் தாலுகாவின், பென்னகெரே கிராமத்தில் வசித்தவர் விவசாயி ராஜசேகர், 58. இவர், நேற்று மதியம் கிராமத்தை ஒட்டியுள்ள நிலத்தில், மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது புலி பாய்ந்து தாக்கிவிட்டு ஓடியது. இதில் பலத்த காயமடைந்த விவசாயி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு வந்து, விவசாயி உடலை மீட்டனர். தகவல் அறிந்து, வனத்துறை அதிகாரிகளும் கிராமத்துக்கு வந்து பார்வையிட்டனர். புலியை பிடிக்கும்படி கிராமத்தினர், வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் புலியை தேடுகின்றனர். 'புலி நடமாட்டம் இருப்பதால், கிராமத்தினர் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடமாட வேண்டாம். சிறு குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளை வெளியே விட வேண்டாம்' என, அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை