உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யஷ்வந்த்பூர் - கார்வார் 4 நாட்கள் சிறப்பு ரயில்

 யஷ்வந்த்பூர் - கார்வார் 4 நாட்கள் சிறப்பு ரயில்

பெங்களூரு: கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி பெங்களூரு யஷ்வந்த்பூர் - கார்வார் இடையே நான்கு நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தென்மேற்கு ரயில்வே அறிக்கை: கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பெங்களூரு யஷ்வந்த்பூர் - கார்வார் இடையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வரும் 24, 25, 26, 27ம் தேதிகளில் யஷ்வந்த்பூரில் இருந்து மதியம், 12:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை, 6:10க்கு கார்வார் சென்றடையும். வரும் 25, 26, 27, 28 ம் தேதிகளில் கார்வாரில் இருந்து மதியம், 12:00 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30க்கு யஷ்வந்த்பூர் வந்தடையும். சிக்கபானவரா, குனிகல், சென்னராயப்பட்டணா, ஹாசன், சக்லேஸ்பூர், சுப்பிரமணியா ரோடு, கபகா புத்துார், பன்ட்வால், சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாபூர், பைந்துார், பட்கல், முருடேஸ்வர், ஹொன்னாவர், குமட்டா, கோகர்ணா ரோடு, அங்கோலா ரயில் நிலையங்களில், இந்த ரயில்கள் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை