உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  யஷ்வந்த்பூர் -- உதானா சிறப்பு ரயில் இயக்கம்

 யஷ்வந்த்பூர் -- உதானா சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு: யஷ்வந்த்பூர் --- உதானா இடையில், நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென்மேற்கு ரயில்வே கூறி இருப்பதாவது: பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து, குஜராத் மாநிலம் உதானாவுக்கு ஒரு மார்க்கமாக, நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை மதியம் 12:00 மணிக்கு புறப்படும் ரயில் 06577, நாளை மறுநாள் மாலை 4: 30 மணிக்கு உதானாவை சென்றடையும். துமகூரு, தாவணகெரே, ஹாவேரி, ஹூப்பள்ளி, தார்வாட், லோண்டா, பெலகாவி, ராய்பாக், மீரஜ், சாங்கிலி, சதாரா, புனே, லோனாவாலா, கல்யாண், வசாய் ரோடு நிலையங்களில் இந்த ரயில் நிற்கும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ