உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வேறு பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது

வேறு பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது

பெலகாவி: ஒன்பது ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதை தடுத்ததால், கோபமடைந்து கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். பெலகாவி மாவட்டம், ஹூக்கேரி தாலுகாவின் யத்குடு கிராமத்தை சேர்ந்தவர் ஐராவதி, 36, என்பவர், கடந்த 14ம் தேதி தோரணஹள்ளி கோவிலுக்கு சென்றவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிக்கோடி போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், ஐராவதியின் மொபைல் போனை ஆய்வு செய்தனர். அவருடன் தாபா எனும், பஞ்சாபி உணவகத்தில் பணியாற்றும் சஞ்சய், 39, என்பவரிடம் கடைசியாக அவர் பேசியது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது, ஐராவதியை கொன்றது தெரிய வந்துள்ளது. இருவரும் ஒன்பது ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தனர். இதற்கிடையில், திருமணம் செய்ய, சஞ்சய் குமார் முடிவு செய்தார். இதற்காக பெண் பார்த்து வந்தார். இரண்டு முறை, பெண் பார்க்க செல்வதை ஐராவதி தடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். மூன்றாவது முறையாக செல்லும் போதும், ஐராவதி தடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சஞ்சய், கடந்த 14ல், ஐராவதியை, சன்யானதாடி கிராமத்தின் வெளிப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த சஞ்சய் குமார், கீழே உடைந்து கிடந்த பீர்பாட்டிலால் ஐராவதி தலையில் தாக்கினர். கீழே விழுந்த அவர் மீது கல்லை போட்டு கொலை செய்தார். வனப்பகுதியில் உடலை வீசிவிட்டு ஓட்டம் பிடித்தார். உடலை வீசிய இடத்தில் போலீசார் நேற்று சென்று பார்த்தனர். ஐராவதியின் உடல் அழுகியிருந்தது. தடயவியல் நிபுணர்கள், மாதிரிகளை சேகரித்தனர். சஞ்சய்குமாரை கைது செய்த சிக்கோடி போலீசார், அவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை