உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காதல் விவகாரத்தில் நண்பரை குத்தி கொன்ற வாலிபர் கைது

காதல் விவகாரத்தில் நண்பரை குத்தி கொன்ற வாலிபர் கைது

நெலமங்களா: பெங்களூரு ரூரல் நெலமங்களா கொல்லஹள்ளி கிராமத்தில் வசித்தவர் தர்ஷன், 26. இவரும், 22 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரும் முடிவு செய்திருந்தனர்.கடந்த 7ம் தேதி கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் தர்ஷன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 21 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது தெரிந்தது.நெலமங்களா ரூரல் போலீசார் நடத்திய விசாரணையில், தர்ஷனை, அவரது நண்பர் வேணுகோபால், 30, கொலை செய்தது தெரிந்தது. தர்ஷன் காதலியும், வேணுகோபாலும் முன்பு காதலித்தனர். கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.தன் முன்னாள் காதலியை திருமணம் செய்ய வேண்டாம் என, வேணுகோபால் கூறியதை, தர்ஷன் கேட்கவில்லை. இதனால், கொலை நடந்தது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு மாண்டியாவில் கைது செய்யப்பட்டார்.கொலை செய்த பின் ரயிலில் திருப்பதி சென்று, மொட்டை அடித்ததும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை