வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமெரிக்காவில் வாழைப்பழம் விளைச்சல் கிடையாது ஆகையால் இறக்குமதி அதிகம் ரஸ்தாளி செவ்வாழை பழங்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருக்கிறதா ?
புதுடில்லி : சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய வளர்ச்சி விகிதம், இனிப்பு மற்றும் காரமான உச்சத்தை எட்டியுள்ளன. வேளாண் உற்பத்தியில் வாழைப்பழம் மற்றும் மிளகாய், தங்கள் பங்களிப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிக நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2023ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அதிக பங்களிப்பை வழங்கும் பழமாக, மாம்பழத்தை விட வாழைப்பழம் முன்னிலை வகித்தது. இது 2024ம் நிதியாண்டிலும் அதன் பங்களிப்பை மேலும் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மொத்த பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் வாழைப்பழங்களின் பங்களிப்பு 10.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2023ம் நிதியாண்டில் 10.50 சதவீதமாகவும், 2022ல் 9 சதவீதமாகவும் இருந்தது. தற்போது பழங்கள் மற்றும் காய்கறிகள், இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமாக உள்ளன.
இந்தியாவின் வேளாண் உற்பத்தியில், மசாலா பொருட்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது. 2019ல் உள்நாட்டு வேளாண் உற்பத்தியில், பருப்பு வகைகளை மசாலா பொருட்கள் முந்தியுள்ளன. 2024ம் நிதியாண்டில், மொத்த உணவு உற்பத்தியில், மசாலா பொருட்களின் பங்களிப்பு 5.90 சதவீதம். இதில், 22 சதவீதத்துக்கு மேல் மிளகாய் பங்கு வகித்தது. இது கொரோனா தொற்று காலத்துக்கு முன் 19 சதவீதமாக இருந்தது.
அமெரிக்காவில் வாழைப்பழம் விளைச்சல் கிடையாது ஆகையால் இறக்குமதி அதிகம் ரஸ்தாளி செவ்வாழை பழங்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருக்கிறதா ?