உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / 20,000 பேரை பணி நீக்கம் செய்கிறது சிட்டி குழுமம்

20,000 பேரை பணி நீக்கம் செய்கிறது சிட்டி குழுமம்

புதுடில்லி:'சிட்டி' குழுமம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20,000 பேர்களை வேலையை விட்டு நீக்க இருப்பதாக என அதன் தலைமை நிதி அதிகாரி மார்க் மேசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிட்டி வங்கி குழுமம், தற்போது உலகளவில் 2.39 லட்சம் பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், வங்கியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பணியாளர் எண்ணிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20,000 பேரை குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், சிட்டி குழுமத்தின் மெக்சிகோ நுகர்வோர் பிரிவின் பனாமெக்ஸ் நிறுவனத்தை, பட்டியலிடும் போது, கூடுதலாக 40,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியில் பணியாளர்களின் எண்ணிக்கையை 1.80 லட்சமாக ஆக எட்டுவதையே நோக்கமாக கொண்டுள்ளது. வேலை நீக்கம் முடிவு கடிமான மனதுடன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியாளர் குறைப்பு நடவடிக்கை, வருவாய் வளர்ச்சியை பாதிக்காது. மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான முயற்சிகள், முதல் காலாண்டு இறுதிக்குள் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை