உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.34.78 லட்சம் கோடியாக அதிகரிப்பு

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.34.78 லட்சம் கோடியாக அதிகரிப்பு

புதுடில்லி,:நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, கடந்தாண்டில் 34.78 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதால், நோட்டுகளின் எண்ணிக்கை வளர்ச்சி குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு1994 84,000 கோடி ரூபாய்2001 2.10 லட்சம் கோடி ரூபாய்2004 3.20 லட்சம் கோடி ரூபாய்2014 12.83 லட்சம் கோடி ரூபாய்2024 34.78 லட்சம் கோடி ரூபாய்முக்கிய தகவல்கள்:* கடந்த 10 ஆண்டுகளில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பின் அடிப்படையிலான வளர்ச்சி, முந்தைய 20 ஆண்டுகளைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது* கடந்த 1994க்கும் 2004க்கும் இடையே பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் வளர்ச்சி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இது கணிசமாக குறைந்துள்ளது* புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் 6.63 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் 7.27 சதவீதமாக இருந்ததுபணப் புழக்கம் அதிகரிக்க காரணங்கள்:* அதிக வங்கிக் கிளைகள், ஏ.டி.எம்., மையங்கள் * கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களிடையே முன்னெச்சரிக்கை மனநிலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை