3 வங்கிகளின் பங்கு வாங்க எச்.டி.எப்.சி.,க்கு அனுமதி
எச்.டி.எப்.சி., பேங்க் ஓராண்டுக்குள் ஏ.யு., ஸ்மால் பைனான்ஸ் பேங்கின் 9.50 சதவீத பங்குகளை வாங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளதாக, பங்குச் சந்தையிடம் ஏ.யு., பேங்க் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, எச்.டி.எப்.சி., வங்கிக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பிய நாளில் இருந்து ஓராண்டுக்குள், அதாவது வருகிற 2026 ஜனவரி 2ம் தேதியுடன், இந்த நிபந்தனை நிறைவேற்றப்படாவிட்டால், ஆர்.பி.ஐ.,யின் அனுமதி ரத்து செய்யப்படும். ஏ.யு., ஸ்மால் பைனான்ஸ் பேங்க் மட்டுமின்றி, கோட்டக் மஹிந்திரா பேங்க் மற்றும் கேப்பிட்டல் ஸ்மால் பைனான்ஸ் பேங்கிலும் 9.50 சதவீத பங்குகளை வாங்குவதற்கு எச்.டி.எப்.சி.,க்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.