உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / இந்திய இல்லங்களின் சேமிப்பு அதிகரிப்பு

இந்திய இல்லங்களின் சேமிப்பு அதிகரிப்பு

இரண்டு ஆண்டுகளாக குறைந்து வந்த நிலை மாறி, இந்திய இல்லங்களின் நிதி சேமிப்பு மீட்சியடைந்து வளர்ச்சி கண்டிருப்பது, புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.மத்திய புள்ளிவிபர தரவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்திய இல்லங்களின் நிதி சேமிப்பு, 2024 நிதியாண்டில் 16.52 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி எதிர்மறையாக இருந்தது. ரியல் எஸ்டேட் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வது குறைந்தது, இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடு, 2022 நிதியாண்டில் 39 சதவீதமாகவும், 2023 நிதியாண்டில் 22 சதவீதமாகவும் இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 6 சதவீதமாக மட்டுமே இருந்தது.அதே நேரத்தில் வைப்பு நிதி முதலீடு அதிகரித்தது. சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பி.எப்., மற்றும் பென்ஷன் திட்ட சேமிப்பும் சீராக உள்ளது. எனினும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் டெபாசிட் மற்றும் கடன் ஆகிய இரு பிரிவுகளிலும் தேக்கத்தை எதிர்கொண்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ