உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்

கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்

நிதித்துறை போக்குகளை கவனித்து வருபவர்கள் கிரெடிட் கார்டு வளர்ச்சியை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். இந்தியர்கள் மத்தியில் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன் 100 மில்லியனை கடந்தது. இந்நிலையில், வரும் ஆண்டுகளில் கிரெடிட் கார்டு எண்ணிக்கை இரு மடங்காகில், 200 மில்லியனை எட்டும் என அண்மையில் பிரைஸ் வாட்டர்ஸ் கூப்பர் நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியர்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பது, நிதி பழக்கங்களில் ஏற்பட்டு வரும் முக்கிய மாற்றங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி:

சவாலான பொருளாதார சூழலிலும் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சி காரணமாக வாங்கும் சக்தி அதிகரித்திருப்பது கிரெடிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது. நுகர்வோர் வசதியை நாடுகின்றனர்.

தொழில்நுட்பம்:

டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான தொழில்நுட்ப முன்னேற்றம் கிரெடிட் கார்டு ஏற்பில் முக்கிய அம்சமாக அமைகிறது. குறிப்பாக இந்தியா டிஜிட்டல் பண பரிவர்த்தனை துறையில் முன்னணியில் இருக்கிறது. கார்டு பரிவர்த்தனை தொடர்பான பாதுகாப்பு அம்சங்களும் வலு சேர்க்கின்றன.

பலவகை சேவைகள்:

கார்டு நிறுவனங்கள் நுகர்வோரின் பலவகை தேவைகளுக்கு ஏற்ற கார்டுகளை அறிமுகம் செய்துள்ளன. இந்த வாய்ப்புகள் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திழுக்கின்றன. வாழ்வியல் சார்ந்த கார்டுகளும், வங்கிகளுடனான கூட்டு முயற்சி திட்டங்களும் புதிய வாய்ப்புகளாக அமைகின்றன.

இ-காமர்ஸ்:

இணையம் மூலம் எளிதாக பொருட்களை வாங்கும் இ-காமர்ஸ் துறையில் எழுச்சியும், கிரெடிட் கார்டு வளர்ச்சிக்கு துணை நிற்கிறது. பண்டிகை காலம் போன்றவற்றில், நுகர்வோர் இ-காமர்ஸ் தளங்கள் வாயிலாக பொருட்கள் வாங்குவதை விரும்புகின்றனர். கிரெடிட் கார்டுகள் இதற்கு ஏற்றதாக உள்ளன.

நிதி பழக்கம்:

இந்திய நுகர்வோரின் வாங்கும் பழக்கத்திலும் முக்கிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பொருளாதார ஆற்றல் காரணமாக நுகர்வோர் பெரிய செலவுகளையும் கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்கின்றனர். இதற்கு முன் தள்ளிப்போட்ட பல செலவுகளை கார்டு மூலம் செய்கின்றனர். கிரெடிட் கார்டு கையாள்வதிலும் அனுபவம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை