மியூச்சுவல் பண்டு வணிகத்தில் நுழைகிறது மாஸ்டர் கேப்பிடல்
புதுடில்லி: மியூச்சுவல் பண்டு வணிகத்தில் ஈடுபட மாஸ்டர் கேப்பிடல் சர்வீசஸ்க்கு, செபி ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியை தலைமையிடமாக கொண்டு நிதிச்சேவைகளை வழங்கி வரும் மாஸ்டர் அறக்கட்டளைக்கு சொந்தமானது மாஸ்டர் கேப்பிடல் சர்வீசஸ். செபியின் முதல்கட்ட ஒப்புதலை பெற்றுள்ளதை அடுத்து, சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கவும், மியூச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணிகளை இந்நிறுவனம் துவங்கலாம். எனினும், முதலீட்டாளர்களுக்கு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு, அனைத்து விதிமுறைகள் மற்றும் பதிவு நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியம். இதன் பின்னர், செபியின் இறுதி ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.