உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / அரசு வசமுள்ள வங்கிகள், எல்.ஐ.சி., பங்குகளை விற்க நடவடிக்கை

அரசு வசமுள்ள வங்கிகள், எல்.ஐ.சி., பங்குகளை விற்க நடவடிக்கை

புதுடில்லி : கிட்டத்தட்ட அரை டஜன் பொதுத் துறை நிறுவனங்களில் தன் பங்குகளில் ஒரு பகுதியை மத்திய அரசு விற்க திட்டமிட்டுள்ளதாக, பங்கு விலக்கல் துறை செயலர் அருனிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். டில்லியில் அவர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், தன் பங்கு விற்பனை வாயிலாக 47,000 கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பங்கு விற்பனை இந்த இலக்கை விஞ்சும் என எதிர்பார்க்கப் படுகிறது. யுகோ வங்கி, மஹாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத் துறை வங்கிகளில் தன் பங்கை குறைத்துக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., யிலும், குறைந்தபட்ச பொதுப் பங்கு வைத்திருப்பதற்கான விதிகளை பின்பற்றி, மீதமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்படும். ஐ.டி.பி.ஐ., வங்கியில் அரசின் பங்குகளை முழுதும் விலக்கிக் கொள்ளும் நடைமுறை இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும். ஓ.என்.ஜி.சி., - என்.எச்.பி.சி., ஆகிய நிறுவனங்கள் தங்கள் பசுமை எரிசக்தி நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை