உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / பணவீக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள்!

பணவீக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள்!

முதலீடு என்று வரும் போது, கூட்டு வட்டியின் தன்மை பெரும் பலனை அளிக்கக் கூடியதாக கருதப்படுகிறது. நீண்ட கால நோக்கில் பணம் வளர இது வழி செய்கிறது. முதலீட்டின் பலனை இது அதிகரித்தாலும், இதற்கு இன்னொரு பக்கமாக பணவீக்கம் அமைகிறது. பணவீக்கத்தின் தன்மை, முதலீட்டின் பலன் மீது தாக்கம் செலுத்துகிறது. பணவீக்கத்தை கருத்தில் கொள்ளும் போது, சேமிப்பு மற்றும் முதலீட்டை மீறி, கையில் உள்ள தொகையின் எதிர்கால மதிப்பு குறைவாகவே இருக்கும். எனவே, பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வழிகளைஅறிந்திருப்பது அவசியம்.

வாங்கும் திறன்:

பணவீக்கம் என்பது பணத்தின் வாங்கும் திறன் குறைவதாக கருதப்படுகிறது. வரும் ஆண்டுகளில் பொருட்களின் விலை அதிகரிப்பதை சார்ந்து இது அமைகிறது. எனவே, இப்போதைய 1 கோடி ரூபாய் என்பது, 7 சதவீத பணவீக்கத்தில் 10 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாயாக அமையலாம்.

எதிர்கால விலை:

சேமிப்பு மற்றும் முதலீடுகளை திட்டமிடும் போது, பணவீக்கத்தின் தன்மையையும் மனதில் கொள்ள வேண்டும். முதலீடு அளிக்கக்கூடிய உண்மையான பலன் என்பது பணவீக்கத்தின் தாக்கத்தை கணக்கிட்ட பின் வருவதாகும். எனவே, எதிர்காலத்தில் பணத்திற்கு என்ன மதிப்பு இருக்கும் என்பது முக்கியம்.

வரி தாக்கம்:

பணவீக்கம் தவிர, வரி அம்சமும் தாக்கம் செலுத்துவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலீட்டின் பலன் மீது பொருந்தக்கூடிய வரி விதிப்பை கணக்கிட வேண்டும். பணவீக்கம் போலவே, வரி விதிப்பின் தாக்கம் புறக்கணிக்க முடியாதது. எனவே தான் முறையான வரி திட்டமிடல் முக்கியமாகிறது.

கூடுதல் கவனம்:

இவை தவிர, முதலீடு தொடர்பான கட்டணங்கள் உள்ளிட்ட செலவுகளும் தாக்கம் செலுத்தலாம். இவைஎல்லாம் சேர்த்து, உங்கள் பணத்தின் மதிப்பை குறைக்கும் என்பதால் தான், பணவீக்கத்தை மிஞ்சக்கூடிய முதலீடுகள் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. உங்கள் பணம் வளர வேண்டும்.

திட்டமிடல்:

பெரும்பாலானோர் சேமிப்பு, ஓய்வுகால திட்டமிடல் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், பணவீக்கம் போன்ற தொடர்புடைய அம்சங்களை கவனிப்பதில்லை. பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் எனில், அதற்கேற்ப திட்டமிடல் அவசியம். சரியான முதலீடு தொகுப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ