மொத்த விலை பணவீக்கம் 14 மாத சரிவு
புதுடில்லி :நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத வகையில், கடந்த மே மாதம் 0.39 சதவீதமாக சரிந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உணவுப் பொருட்களில், குறிப்பாக வெங்காயம், உருளை மற்றும் பருப்பு வகைகளின் விலை வீழ்ச்சி கண்டிருந்தது.