உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஐ- கியூப் ஸ்கூட்டர்கள்- திரும்ப பெறும் டி.வி.எஸ்.,

ஐ- கியூப் ஸ்கூட்டர்கள்- திரும்ப பெறும் டி.வி.எஸ்.,

சென்னை : சேசிஸ் நிலைத்தன்மையை ஆய்வு செய்ய, 2023 ஜூலை 10 முதல், செப்டம்பர் 9ம் தேதிக்குள் தயாரிக்கப்பட்ட 'ஐ கியூப்' மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெற்றுள்ளதாக, டி.வி.எஸ்., நிறுவனம் அறிவித்துள்ளது.இக்காலக்கட்டத்தில், 45,000 ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.இதுகுறித்து, நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: ஆய்வின் போது ஏதேனும் குறைபாடு இருந்தால், எந்த செலவுமின்றி உபகரணங்கள் மாற்றித் தரப்படும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு, எந்த வித அசவுகரியங்கள் ஏற்படாத வண்ணம், ஒவ்வொரு கட்டமாக ஸ்கூட்டர்கள் ஆய்வுக்கு பெறப்படும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்