மேலும் செய்திகள்
ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு நிலம்
3 hour(s) ago
இந்தியாவுக்கு சலுகை வழங்க நியூசிலாந்தில் எதிர்ப்பு
3 hour(s) ago
அம்புஜா சிமென்ட்ஸ் உடன் ஏ.சி.சி., ஓரியன்ட் இணைப்பு
3 hour(s) ago
புதுடில்லி : கடந்த டிசம்பர் காலாண்டில், 448 உள்கட்டமைப்பு திட்டங்கள் 5.55 லட்சம் கோடி ரூபாய் செலவு மீறல்களை சந்தித்ததாக, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசின் 1,897 உள்கட்டமைப்பு திட்டங்களில், 150 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய 448 திட்டங்கள், கடந்த டிசம்பர் காலாண்டில், 5.55 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான செலவு மீறல்களை சந்திக்க நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, மொத்த உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 65.20 சதவீதமாகும். கடந்த 2024ம் நிதியாண்டில், இந்த 1,897 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 3.70 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. புதிதாக ஒதுக்கப்பட்ட நிதியை கருத்தில் கொள்கையில், 292 திட்டங்கள், 2.89 லட்சம் கோடி ரூபாய் செலவு மீறல்களை எதிர்கொள்கின்றன.மேலும், 272 திட்டங்கள் நேர மற்றும் நிதி விரய பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இத்திட்டங்களுக்கான மொத்த செலவு 16.89 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, எதிர்பார்க்கப்படும் திட்ட நிறைவு செலவில் 53.22 சதவீதமாகும்.திட்டங்களுக்கான மொத்த செலவு - ரூ.16.89 லட்சம் கோடிஎதிர்பார்க்கப்படும் நிறைவு செலவு - ரூ.31.74 லட்சம் கோடி தாமதத்திற்கான காரணிகள் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் -- ஒழுங்கு பிரச்னை வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி கொரோனா ஊரடங்கு
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago