உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏசி விற்பனை அதிகரிப்பால் கப்பலுக்கு காத்திராமல் விமானத்தில் இறக்குமதியாகும் உதிரிபாகங்கள்

ஏசி விற்பனை அதிகரிப்பால் கப்பலுக்கு காத்திராமல் விமானத்தில் இறக்குமதியாகும் உதிரிபாகங்கள்

புதுடில்லி:வெயில் கடுமையாக சுட்டெரிப்பதை அடுத்து, ஏசிகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால், 'ஏசி' தயாரிப்பதற்கு தேவைப்படும் உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வாயிலாக இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக, துறையினர் தெரிவித்துள்ளனர்.நடப்பாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க மக்கள் ஏசிகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இதையடுத்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏசி விற்பனை, அதிகரித்து வருகிறது.புதிய ஏசிகள் தயாரிப்பு மற்றும் சர்வீஸ் ஆகியவற்றுக்கு கம்ப்ரசர்கள், சர்க்யூட் போர்டுகள் போன்ற உதிரிபாகங்களின் தேவை அதிகரித்துள்ளது. இவை உள்நாட்டில் போதுமான அளவு கிடைக்காத சூழல் நிலவுகிறது.வெளிநாடுகளில் இருந்து, கப்பல்கள் வாயிலாக இறக்குமதி செய்வதில் காலதாமதம் ஏற்படும். அதனால் விமானம் வாயிலாக இறக்குமதி செய்து, அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.நடபாண்டில் ஏசி விற்பனை கிட்டத்தட்ட 1.4 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ