உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பி.எப்., மாற்றத்திற்கு தேவையான அம்சங்கள்

பி.எப்., மாற்றத்திற்கு தேவையான அம்சங்கள்

பணி மாற்றத்தின் போது பி.எப்., கணக்கு தானாக மாறுவதற்கு வழி செய்ய, பயனாளிகள் தங்கள் கணக்கு தொடர்பான குறிப்பிட்ட சில அம்சங்களை உறுதி செய்து கொள்வது அவசியம்.தொழிலாளர் சேமநல நிதியான பி.எப்., எதிர்கால பாதுகாப்பிற்கு முக்கியமாக அமைகிறது. பொதுவாக ஊழியர்கள் வேலை மாறும் போது, பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு பி.எப்., கணக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கென தனியே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.எனினும், அண்மையில் பி.எப்., அலுவலகம் இதற்கான செயல்முறையை சீராக்கி இருப்பதால், ஊழியர்கள் பணி மாறும் போது கணக்கு தானாக மாறுவது சாத்தியமாகி இருக்கிறது. எனினும், பி.எப்., கணக்கு தானாக புதிய நிறுவனத்திற்கு மாற, கணக்கில் சில அம்சங்கள் இருக்க வேண்டும்.பணி மாறும் போது, பி.எப்., கணக்கு தொடர்பான நிரந்தர எண், ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் சரியாக இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். மேலும், பழைய நிறுவனத்தில் ஊழியர் பணியில் சேர்ந்த நாள் மற்றும் விடுபடும் நாள் சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி