மேலும் செய்திகள்
சேவைகள் துறை வளர்ச்சி 2 ஆண்டுகளில் இல்லாத சரிவு
06-Feb-2025
புதுடில்லி:வலுவான தேவை காரணமாக புதிய ஆர்டர்கள் கிடைத்ததால், நாட்டின் சேவைகள் துறை, பிப்ரவரி யில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஜனவரியில் 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு 56.50 புள்ளிகளாக சரிந்திருந்த சேவைகள் துறை வளர்ச்சி, பிப்ரவரியில் 59 புள்ளிகளாக அதிகரித்து உள்ளது. பி.எம்.ஐ., குறியீட்டை பொறுத்தவரை, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால் சரிவையும் குறிக்கும்.
உள்நாடு, உலகளவில் வலுவான தேவை புதிய சர்வதேச ஆர்டர்கள் அதிகரிப்பு
பிப்ரவரியில் விரைவாக பணியமர்த்தல் நடவடிக்கைகள் நடைபெற்று உள்ளன. தயாரிப்பு, சேவை ஆகிய இரண்டு துறைகளின் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, ஜனவரியில் 57.70 புள்ளிகளில் இருந்து, பிப்ரவரியில் 58.8 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
06-Feb-2025