உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்துடன் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் ஒப்பந்தம்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்துடன் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை:தொழில் உறவுகளை மேம்படுத்த, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் இடையில், சென்னையில் நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக இரு அரசுகளும், மேம்பட்ட உற்பத்தி, உயிரி அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட உள்ளன. தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் டாரேஸ் அகமது, கனெக்டிகட் மாகாண அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி