புதிய உச்சம் கண்ட துாத்துக்குடி துறைமுகம்
துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகம், இந்த நிதியாண்டில் கன்டெய்னர் கையாளுவதில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த நிதியாண்டில் 7.47 லட்சம் கன்டெய்னர்களை கையாண்டிருந்த நிலையில், தற்போது நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 20 நாட்களுக்கு முன்னரே, அதை விட 100 கன்டெய்னர்களை அதிகமாக கையாண்டுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிவடையும் மார்ச் 31ம் தேதிக்குள், இது இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சரக்கு கப்பல்கள் வரும் நுழைவாயிலை அகலப்படுத்தும் பணியும், ஆழப்படுத்தும் பணியும் இன்னும் சில மாதங்களுக்குள் முடிவடைய உள்ளதால், சரக்கு போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.