உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சமையல் எண்ணெய் தேவையில் தன்னிறைவு பனை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

சமையல் எண்ணெய் தேவையில் தன்னிறைவு பனை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

புதுடில்லி:சமையல் எண்ணெய் தேவையில் தன்னிறைவு ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டம் என்.எம்.இ.ஓ.ஓ.பி.,யின் கீழ் மாநிலங்கள் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சமையல் எண்ணெய் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடையவும், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும், விவசாயிகளின் வருவாயை பெருக்கிடவும், மத்திய அரசு என்.எம்.இ.ஓ.ஓ.பி., திட்டத்தை உருவாக்கியுள்ளது. உள்நாட்டு பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக துவங்கப்பட்ட இத்திட்டம், வரும் 2025 - 26ம் நிதியாண்டுக்குள், 6.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களை, எண்ணெய் பனை தோட்டத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுஉள்ளது. இதில், சில மாநிலங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில மாநிலங்கள் தங்கள் முயற்சிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியின் குறைவான பயன்பாடு மற்றும் இலக்குகளை அடைவதில் தாமதம் ஆகியவை மாநிலங்களின் அணுகுமுறை மாற வேண்டியதன் அவசியத்தைஎடுத்துக்காட்டுகிறது. ஆகவே, வேளாண் துறை அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள தடைகளை நிவர்த்தி செய்து, கிடைக்கக்கூடிய வளங்களைத் திரட்டி தங்கள் இலக்குகளை அடைவதற்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ