உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கரூரில் 1,000 டன் கொசுவலை தேங்கும் நிலை; குவியும் இறக்குமதியை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூரில் 1,000 டன் கொசுவலை தேங்கும் நிலை; குவியும் இறக்குமதியை கட்டுப்படுத்த கோரிக்கை

கரூர் : கொசுவலை இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்படா விட்டால், கரூரில் தேங்கியுள்ள 1,000 டன் கொசு வலையால், உற்பத்தியாளர்களுக்கு 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூரில் ஜவுளி தொழிலுக்கு அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரக் கூடியதாக பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழில் இருந்து வருகிறது.

முறைகேடாக இறக்குமதி

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொசு வலைகளால், உற்பத்தி முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.இது குறித்து, கரூர் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.குப்புராவ் கூறியதாவது:உள்நாட்டு தயாரிப்பை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, கிலோ, 3.50 டாலருக்கு குறைவான அடக்கவிலை கொண்ட கொசுவலைகளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதித்து அறிவித்தது. ஆனால், இந்த தடையிலிருந்து தப்பிக்கும் வகையில், அடக்க விலையை 3.60 டாலராக பில் செய்து, இறக்குமதி செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் முறைகேடான வழிகளில், இந்தியாவிற்குள் வெளிநாட்டு கொசுவலைகள் வருகின்றன. மத்திய அரசு விதித்த கட்டுப்பாடு பயனற்றதாகிவிட்டது. தைவானில் இருந்து மட்டும் மாதந்தோறும், 450 டன் கொசுவலை இறக்குமதியாகிறது.

ரூ.25 கோடி இழப்பு

வரும், ஜனவரி, பிப்ரவரி மாதம் தான் கொசுவலை விற்பனை சீசன். இதை எதிர்பார்த்து, கொசுவலைகளை தயார் செய்து, விற்பனைக்கு காத்திருக்கிறோம். இறக்குமதி குறித்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால், ஏற்கனவே உற்பத்தி செய்து வைத்த, 1,000 டன் கொசுவலைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால், 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர், கூறினார்.தேங்கியுள்ள 1,000 டன் கொசு வலையால், உற்பத்தியாளர்களுக்கு 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை