‘ஜீரோ டிபெக்ட் – ஜீரோ எபெக்ட்’ திட்டம் தரச்சான்றுக்கு 11 லட்சம் நிறுவனங்கள் பதிவு
திருப்பூர்: மத்திய அரசின் ‘ஜீரோ டிபெக்ட் – ஜீரோ எபெக்ட்’ தரச்சான்று திட்டத்தில், நாடு முழுதும் இதுவரை. 10.91 லட்சம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை உலக தரத்துக்கு உயர்த்தவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உற்பத்தியை மேற்கொள்ளவும் மத்திய அரசு, கடந்த 2016ம் ஆண்டு முதல் ‘ஜீரோ டிபெக்ட் – ஜீரோ எபெக்ட்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் தரம், பணியிட துாய்மை, தொழில் பாதுகாப்பு, மனிதவள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் நிறுவனங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று நிலைகளில் தரச்சான்று வழங்கப்படுகிறது. தொழில் மைய அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணைந்து, தரமான உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நிறுவனங்களின் மதிப்பும், உற்பத்தி பொருட்களின் தரமும் சர்வதேச அளவில் உயரும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெறுவதுடன், திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளையும் நிறுவனங்கள் பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். நிறுவனங்கள் | தரச்சான்று6,317 | தங்கம்11,247 | வெள்ளி7.75 லட்சம் | வெண்கலம் மொத்த பதிவு 7.93 லட்சம் (கடந்த அக்., நிலவரப்படி)