உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சூளகிரி சிப்காட்டில் 50,000 பேருக்கு வேலை

சூளகிரி சிப்காட்டில் 50,000 பேருக்கு வேலை

சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சிப்காட், 1, 2 மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன. இங்கு, 150க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள், 2,500க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றின் வாயிலாக, ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், ஓசூர் அருகே சூளகிரியில், 3வது சிப்காட், 1,021 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 95 தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க இடம் வாங்கியுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம் வாங்கியுள்ள நிறுவனங்கள்

 ஷெப்லர் மைவா பார்மா பிரேக்ஸ் இந்தியா கான்டினென்டல் இன்ஜின் மெர்லின்ஹாக் ஏரோஸ்பேஸ்

ரூ.600 கோடி முதலீடு

ஓசூர் சிப்காட் 2ல், சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டை ஒட்டி, 'எகோவேஸ்ட் ஸ்பேஸ் ரியாலிட்டி' என்ற நிறுவனம், 86 ஏக்கரில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், ஒரு புதிய தொழில் பூங்காவை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் வாயிலாக, 16,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை