உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெட்ரோல் விற்பனை 7 சதவீதம் அதிகரிப்பு

பெட்ரோல் விற்பனை 7 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:பண்டிகை கால நடவடிக்கைகள் வேகமெடுக்கத் துவங்கியதையடுத்து, தனிநபர் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்த காரணத்தால், கடந்த மாதம் நாட்டின் பெட்ரோல் விற்பனை 7.30 சதவீதம் அதிகரித்துள்ளது.அதே நேரத்தில், பருவமழை காரணமாக, விவசாயத் துறையின் டீசல் பயன்பாடு குறைந்ததால், அதன் விற்பனை 3.30 சதவீதம் சரிந்துள்ளது. நாட்டின் 90 சதவீத பெட்ரோல், டீசல் விற்பனையை மேற்கொள்ளும் மூன்று பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த மாத விற்பனை நிலவரம் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளன. இதன்படி, கடந்தாண்டு அக்டோபரில் 28.70 லட்சம் டன்னாக இருந்த பெட்ரோல் விற்பனை, நடப்பாண்டு அக்டோபரில் 31 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. டீசல் விற்பனை 3.30 சதவீதம் சரிந்து, 67 லட்சம் டன்னாக இருந்தது. பருவமழை காரணமாக வாகன பயன்பாடு குறைந்ததால், கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விற்பனை வளர்ச்சி மந்தமாகவே இருந்து வருகிறது. அக்டோபர் மாதத்துக்கான ஜெட் எரிபொருள் விற்பனை 2.50 சதவீதம் உயர்ந்து, 6.48 லட்சம் டன்னாகவும்; சமையல் எரிவாயு விற்பனை 7.50 சதவீதம் அதிகரித்து 28.20 லட்சம் டன்னாகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி