உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்குச்சந்தை ஒரு பாா்வை

பங்குச்சந்தை ஒரு பாா்வை

இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் லேசான ஏறுமுகத்துடன் முடிந்தது. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் வார இறுதி வர்த்தக நிறைவு நாளான வியாழன் அன்று, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 58 புள்ளிகள் உயர்ந்து, 80,598 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 12 புள்ளிகள் உயர்ந்து, 24,631 புள்ளியாக இருந்தது. நிகர அடிப்படையில் ஆறு வார காலத்திற்கு பின், இரு குறியீடுகளும் ஏறுமுகத்துடன் முடிந்தன. சர்வதேச சந்தையின் போக்கு தாக்கம் செலுத்தியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றினர். - ஏறுமுகம் கண்ட பங்குகள் 1. இடர்னல்- 318.35 (1.94) 2. இன்போசிஸ்- 1447.45 (1.50) 3. ஏசியன் பெயின்ட்ஸ்- 2529.25 (1.16) இறங்குமுகம் கண்ட பங்குகள் 1. டாடா ஸ்டீல்- 155.30 (3.03) 2. டெக் மஹிந்திரா- 1486.30(1.53) 3. அதானி போர்ட்ஸ்- 1302.00 (1.45)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி