உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பால் பொருட்களில் கலப்படம் தடுக்க நடவடிக்கை தேவை

 பால் பொருட்களில் கலப்படம் தடுக்க நடவடிக்கை தேவை

புதுடில்லி: பால், பால் பொருட்களில் கலப்படம் மற்றும் பொட்டலம் மீதான பொய் தகவல்களை தடுக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு இந்திய உணவு தர நிர்ணய கண்காணிப்பு அமைப்பான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவுறுத்தியுள்ளது. பனீர், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பற்ற முறையிலும் தயாரித்து விற்கப்படுவது பொதுமக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என அந்த அமைப்பின் அதிகாரிகள் டில்லியில் தெரிவித்தனர். எனவே, பால், பால் பொருட்களின் கலப்படம், இடம்பெறும் பொருட்கள் குறித்த தவறான தகவல் ஆகியவற்றை தடுக்க, சிறப்பு அமலாக்க நடவடிக்கை தேவை என மாநில அரசுகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை