உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முதல் தனியார் பெட்ரோலிய சேமிப்பு நிலையத்துக்கு ஒப்பந்தம்

முதல் தனியார் பெட்ரோலிய சேமிப்பு நிலையத்துக்கு ஒப்பந்தம்

ஹைதராபாத்:இந்தியாவின் முதல் தனியார் துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, 'மேகா இன்ஜினியரிங்' நிறுவனம் கைப்பற்றி உள்ளது. கர்நாடகா மாநிலம் படூரில், 5,700 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பெட்ரோலிய சேமிப்பு நிலையத்தில், தற்போதைய மதிப்பில், கிட்டத்தட்ட 11,020 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோலை சேமிக்க முடியும். 5 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ள இந்த சேமிப்பு நிலையம் வாயிலாக, இந்தியாவின் எரிபொருள் சேமிப்பு திறன் 5.33 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். இதனை வைத்து, நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில், 8 முதல் 9 நாட்கள் வரை சமாளிக்க முடியும். இத்திட்டத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், சேமிப்பு நிலையத்தில் இருந்து பெட்ரோல் விற்பனை, ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி, வருவாய் இடைவெளியை நிரப்புவதற்கான நிதி, திட்டத்தின் மதிப்பில் 60 சதவீதம் வரை அளிக்கப்படும் உள்ளிட்ட சலுகைகளை ஐ.எஸ்.பி.ஆர்.எல்., அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ