உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஹூண்டாய் கார்களில் அமரான் பேட்டரி

ஹூண்டாய் கார்களில் அமரான் பேட்டரி

சென்னை:உள்நாட்டில் தயாரிக்கப்படும் 'ஏ.ஜி.எம்.,' எனப்படும் லெட் ஆசிட் பேட்டரியை பயன்படுத்தும் முதல் கார் நிறுவனமாகியுள்ளது 'ஹூண்டாய்' நிறுவனம். இந்த பேட்டரியை, அமரராஜா குழுமத்தின் அமரான் பிராண்டு தயாரித்துள்ளது. பொதுவாக, இக்னிஷன் ஸ்டார்ட், ஸ்டாப் மற்றும் கார் லைட்டுகளுக்காக இவை பயன்படுத்தப்படும்.இரு நிறுவனங்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த பேட்டரிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த நிதியாண்டின் இறுதி காலாண்டு முதல் ஹூண்டாய் புதிய கார்களில் இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்படும்.சோதனையில், சாதாரண பேட்டரிகளை விட, இந்த வகை பேட்டரிகள் 150 சதவீதம் அதிக செயல்திறனை வெளிப்படுத்துவதாக, ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உள்நாட்டுமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ