உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்கர்கள் கையில் இனி இந்திய ஐபோன்

அமெரிக்கர்கள் கையில் இனி இந்திய ஐபோன்

புதுடில்லி:ஆப்பிள் நிறுவனம், அமெரிக்க சந்தைக்கான ஐபோன்கள் உற்பத்தியை, பெருமளவில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவதாக வந்த செய்திகளை, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்குக் உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவைவிட, இந்தியாவில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால், அமெரிக்க சந்தைகளுக்கான ஐபோன்களில் பாதியை, இந்தியாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் வாங்குகிறது. அமெரிக்க சந்தைக்காக வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆப்பிளின் பிற தயாரிப்புகள் கொண்டு வரப்படுகின்றன.இனி, அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களின் பிறப்பிடமாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

DAKSHINAMOORTHY T
மே 04, 2025 00:08

எத்தனை ஆயிரம் லிட்டர் சொல்லுங்களேன் நீங்கள் சொல்வதை பார்த்தால் குளத்திற்குள் தான் கம்பெனி இருக்கும் என்று நின்னைக்கின்றேன்


Mani . V
மே 03, 2025 05:44

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? ஒரு ஐபோனை தயாரிக்க எத்தனை ஆயிரம் லிட்டர் நீரை இந்தியா விரயம் செய்ய வேண்டும் என்று தெரியுமா? அதனால்தான் அமெரிக்காக்காரன் தன் நாட்டில் தொழிற்ச்சாலைகளை ஏற்படுத்துவதில்லை. அவர்கள் விரும்பிக் குடிக்கும் கொக்கக்கோலா தொழிற்ச்சாலை ஒன்று கூட அமெரிக்காவில் இல்லை. இதனால் இந்தியா வெகுவிரைவில் வறட்சி நாடாக மாறும்.


m.arunachalam
மே 03, 2025 00:31

இந்தியர்களுக்கு அருகதை இல்லாத பெருமை .


முக்கிய வீடியோ