உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழக அரசிடம் ஆர்டர் பெற்றது அசோக் லேலண்டு

தமிழக அரசிடம் ஆர்டர் பெற்றது அசோக் லேலண்டு

சென்னை:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து, கிட்டத்தட்ட 346 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் பேருந்துகளை தயாரித்து, வினியோகிப்பதற்கான 'ஆர்டரை' பெற்று உள்ளதாக 'அசோக் லேலண்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்ட அசோக் லேலண்டு நிறுவனம், வணிக ரீதியிலான வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், நேற்று பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், டீசலில் இயங்கக் கூடிய 1,475 பி.எஸ்.,6 ரக பயணியர் பேருந்துகளை தயாரிப்பதற்கான ஆர்டரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் இருந்து பெற்றுள்ளோம்.இதன் மொத்த மதிப்பு 345.58 கோடி ரூபாய் எனவும்; நடப்பு டிசம்பர் முதல் வரும் 2025, மே மாதத்திற்குள் பேருந்துகளை டெலிவரி செய்ய இருப்பதாகவும் தெரிவித்தது.மேலும், தன் துணை நிறுவனமான 'எல்.எல்.சி அசோக் லேலண்டு ரஷ்யா'வை, தானாக முன் வந்து கலைப்பதாகவும் தெரிவித்து இருந்தது.நேற்றைய வர்த்தக நேர முடிவில், அசோக் லேலண்டு பங்கு விலை 1 சதவீதம் உயர்வு கண்டு, 232 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை