விமான எரிபொருள்
அமெரிக்காவுக்கு சரக்கு கப்பல் வாயிலாக முதல்முறையாக இந்தியாவில் இருந்து விமான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த செவரான் நிறுவனத்துக்கு சொந்தமான கலிபோர்னியா சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸில் விமான எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜாம்நகர் துறைமுகத்தில் இருந்து 60,000 டன் விமான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.