உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வங்கதேச இறக்குமதிக்கு தடை உத்தரவு

வங்கதேச இறக்குமதிக்கு தடை உத்தரவு

புதுடில்லி,:வங்கதேசத்திலிருந்து சில பொருட்களை தரை வழியாக இறக்குமதி செய்ய, மத்திய அரசு மூன்று நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. இந்நிலையில், இம்முடிவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் வகையில் நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் வாயிலாக தரை வழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.கடந்த மாதம் சீனா சென்றிருந்த வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், நம் நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். மேலும், இந்தியாவிலிருந்து தரை வழியாக நுால் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக, மத்திய அரசும் தடை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ