உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.633 கோடி ஆர்டர் பெற்றது பெல்

ரூ.633 கோடி ஆர்டர் பெற்றது பெல்

பெங்களூரு:கடற்படை கப்பல்களுக்கான உதிரி பாகங்கள், உபகரணங் களை வினியோகம் செய்ய, மத்திய பொது துறை நிறுவனமான பெல், 633 கோடி ரூபாய் மதிப்பில் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதில், வெவ்வேறு வகையான சென்சார்கள், ஆயுத உபகரணங்கள், நெருப்பு கட்டுப்பாடு அமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில், இந்நிறுவனம் 592 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்று இருந்தது. இதில், போர் கட்டுப்பாட்டு அமைப்பு, ரயில் விபத்து தவிர்ப்பு அமைப்பு, ஜாமர்கள், உதிரிபாகங்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிறுவனத்தின் கடைசி காலாண்டு லாபம், 22.47 சதவீதம் உயர்ந்து, 969 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்த வருவாய், 4.62 சதவீதம் உயர்ந்து, 4,439 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், பெல் நிறுவனம் 56.49 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !