உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாதுகாப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்

பாதுகாப்பு துறையில் தொழில் வாய்ப்புகள்

சென்னை:ராணுவ அமைச்சகத்தின் கீழ், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு செயல்படுகிறது. இது, நாட்டின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, அதிநவீன ஆயுத அமைப்புகள், ராணுவ தொழில்நுட்பங்கள், உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதற்காக தேவைப்படும் சாதனங்களை தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் இருந்து டி.ஆர்.டி.ஓ., கொள்முதல் செய்வதற்கு உதவும் நடவடிக்கையில், 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, டிட்கோ, தமிழக வான்வெளி தொழில் மேம்பாட்டு சங்கத்துடன் இணைந்து, சென்னையில் வரும், 26ம் தேதி, டி.ஆர்.டி.ஓ., பாதுகாப்பு மாநாடு - தமிழகம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில், டி.ஆர்.டி.ஓ., தலைவர் மற்றும் டைரக்டர் ஜெனரல்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. டி.ஆர்.டி.ஓ.,வில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து, அதன் அதிகாரிகள் தொழில் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிப்பர். அதற்கு ஏற்ப, பொருட்களை தயாரித்து, நிறுவனங்களும் தொழில் வாய்ப்பை பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி